கமல்ஹாசனின் சிங்கப்பூர் பேச்சு குறித்த ஓர் அலசல்
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த "அனைத்துலக அரங்கில் தமிழ்" என்ற மாநாட்டில் திருவாளர் கமல்ஹாசன், தன் பங்குக்கு தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை கடுமையாக சாடியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழ்ப்பற்று அற்றவர்கள், ஆங்கில மோகத்தில் சீரழிபவர்கள் என்றெல்லாம்!
நல்ல திரைப்படங்கள் வாயிலாக கமல் ஓரளவு தமிழ்ச்சேவை செய்துள்ளார் என்றாலும் கூட, இவ்வாறு தாறுமாறாக தமிழ்நாட்டுத் தமிழர்களை கேவலமாகப் பேச தானாக உரிமை எடுத்துக் கொள்வதற்கு, அவர் ஓன்றும் பெரும் தமிழ்த் தொண்டாற்றிய மூதறிஞர் அல்லர்! என்னவோ சிங்கப்பூரில் வாழும் "இனிய" (கமல் கண்ணோட்டத்தில்!) தமிழர்கள் மத்தியில் வள்ளுவப் பெருந்தகையும், நக்கீரரும் உலவுவது போலவும், தமிழ்நாட்டில் என்னவோ "கசப்பான" ஆங்கிலேய ஆட்சி நடப்பது போலவும் பேசியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்ப்பற்று மிக்க "இனிய" சிங்கப்பூரிலேயே தங்கிக் கொண்டு தமிழ்ப்படம் தயாரித்து வெளியிட்டு, அவர் மகிழ்ச்சியுடன் இருக்கட்டுமே!! யார் தடுத்தது?
உலகநாயகனின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியிலும், அன்னார் சிகரங்களைத் தொட துணையாக நின்றதிலும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் வாழும் தமிழர்களின் பங்களிப்பை விட அதிகம் என்பதை யாரும் மறுக்க இயலாது. கமல் அவர்களின் கணிப்பில் ஆங்கில மோகம் கொண்ட நாங்கள் தானே அவர் நடித்த படங்களை பல முறை (திரையரங்குகளில் தான்!) பார்த்து ரசிக்கிறோம். ஓன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. தமிழ்நாட்டுத் தமிழன் சோற்றாலடித்த பிண்டம், அவனை யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படியே, கமலுக்கு உண்மையான ஆதங்கம் இருந்தாலும் கூட, அதை இங்கு கூறுவதை விடுத்து வெளிநாடு சென்று சேற்றை வாரியிறைப்பது அழகல்ல.
நம் தமிழ் Bloggers-இல் பலர் Professionals-ஆக இருப்பதால், பணி நிமித்தம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தாலும் கூட, வலைப்பதிவுகள் வாயிலாக உலகளாவிய வலையில் தமிழ் மொழியையும், தமிழார்வத்தையும் வளர்த்து வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று.
அதே மாநாட்டில் நடந்த, கமல் பதில் அளித்த கேள்வியரங்கத்தில் ஒரு தமிழ்நாட்டுத் தமிழர் (வேலை நிமித்தம் சிங்கப்பூர் சென்றவர்) கமலிடம் அவர் ஏன் அவ்வாறு தங்களை இழித்துப் பேசினார் என வினவியதற்கு கமல் அவர்கள் " பின்னே என்ன, தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழை நேசிக்கிறார்கள், தமிழ் மொழியை காப்பாற்றுகிறார்கள், ஆங்கிலத்தை மதிப்பதில்லை என்றெல்லாம் பொய் சொல்லச் சொல்கிறீர்களா?" என்று பதில் வினாவெழுப்பினார். " ஐயா! நீங்கள் உண்மையும் கூற வேண்டாம். பொய்யும் பேச வேண்டாம்! உங்களைப் பற்றியும், தமிழ் சினிமாவைப் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் நிறைய பேசுங்கள்! எங்களை பழிக்காதீர்" என்று கூற விரும்புகிறேன்.
கமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுத் தமிழர்களின் மீதும் குற்றம் சாட்டுவதை விடுத்து அவர் சார்ந்த திரைப்படத் துறையாலும், அவர் அடிக்கடி தோன்றும் சின்னத்திரையாலும் தமிழுக்கு ஏற்படும் சீரழிவையும், பின்னடைவையும் பற்றி (மட்டும்) பேசியிருந்தால் அது நியாயமும் நேர்மையும் கூடிய பேச்சாக அமைந்திருக்கும்.
வெகு காலமாகவே, தமிழ்த் திரையுலகில், நடிகைகள் தமிழ் பேசத் தெரியாமல் இருப்பது, ஒரு முக்கியத் தகுதியாகவே கருதப்படுகிறது!?!?
"ஓடிப்போயி கல்யாணந் தான் கட்டிக்கலாமா?", "கட்டே, கட்டே, நீ நாட்டுக்கட்டே!", "மலே, மலே, மருதமலே!" போன்ற சமூக நோக்குடைய தமிழ் பாடல்களும், இட்லியில் பீர் (Beer) ஊற்றி சாப்பிடும் (சாமி!) புதுமையும், தமிழறியா வடநாட்டு இறக்குமதி நடிகைகளும், தமிழ்த் திரையுலகம் நமக்கு வழங்கிய கொடை அல்லவா!?!?!
தன்னைத் தானே தமிழ் மொழிக் காவலராக சிங்கப்பூரில் அறிவித்துக் கொண்டதின்(!) அடுத்த கட்டமாக, கமல் அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்காக என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்பதை அவரது "வசூல் இல்லா" ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
என்றென்றும் அன்புடன்
பாலா
7 மறுமொழிகள்:
ஐயா, வலைப்பதிவுத் தோழர்களே, Controversial Topic என்றால் காத தூரம் ஓடி விடுவீர்களா? இந்த கட்டுரைக்கு ஒருவரும் (FOR or AGAINST) பின்னூட்டம் தரவில்லையே? எனக்கென்னவோ, பாலா கொஞ்சம் கோபத்தோடு (நியாயமான) எழுதியிருப்பது போல் தோன்றினாலும் அவர் கருத்துக்களில் ஒரளவு உடன்பாடே.
கமல் படத்தில் நடிக்க மாட்டார். பாத்திரமாகவே மாறிவிடுவார். ஆனால் பேட்டி என்று வந்தால் தான் அறிவுக்கொழுந்து என்று நிரூபிக்க வித்தியாசமாய் பேசுகிறேன் என்று இப்படிதான் உளறுவார். அப்போது ஓவர் ஆக்டிங்காய் தோன்றும்.
usha
அன்பு நண்பர்களே!
கமல் ஹாஸன் சிங்கையில் உள்ளதை உள்ளபடிதான் பேசியுள்ளார்.
அங்கும் தமிழ் மக்கள் மத்தியில்தான் பேசியுள்ளார்.
அவர் சின்ன டிவியில் பேசியிருக்கலாம், தமிழ்நாட்டில் பேசியிருக்கலாம் என்பதெல்லாம் அபத்தம்
ஆரோக்கியமான நல்லுணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் இன, சமூக, தேச எல்லைகள் கிடயாது என்பதை அறியீரோ?
கருணகரமூர்த்தி.பொ. பெர்லின்
அன்பு நண்பர் கருணா,
"உள்ளதை உள்ளபடிதான்" பேசுவதோடு நில்லாமல் இந்நிலை மாற அவர் என்ன முயற்சி எடுத்துள்ளார் / எடுக்கவிருக்கிறார் என்று அந்த தமிழ் மொழிக் காவலர் கூறியிருப்பாரேயானால், அவர் உண்மையான அக்கறை உள்ளவர் எனலாம். தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரராக முடியாது! One should not preach what he cannot follow! தமிழ்த்திரையுலகை முற்றும் திருத்திய பின்னர் அம்மாமனிதர் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பக்கம் தன் கவனத்தை திருப்புதல் தான் அவர் செய்யக்கூடிய சாலச் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்!!! தாங்கள் பெர்லின்வாசி என்பதால், கமலின் பேச்சு தங்களை பாதிக்கவில்லை போலும்!?!?
மூர்த்தி அவர்கள் கூறியது போல், "அவரை வாழவைத்தது தமிழகத் தமிழர்கள் என்பதை அவர் மறந்தது கொடூரம்!" 'தமிழை வளர்க்கும் எங்கள்(?) சிங்கம்' இதை கட்டாயம் உணர வேண்டும்.
அன்பு நண்பர் கருணா,
"உள்ளதை உள்ளபடிதான்" பேசுவதோடு நில்லாமல் இந்நிலை மாற அவர் என்ன முயற்சி எடுத்துள்ளார் / எடுக்கவிருக்கிறார் என்று அந்த தமிழ் மொழிக் காவலர் கூறியிருப்பாரேயானால், அவர் உண்மையான அக்கறை உள்ளவர் எனலாம். தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரராக முடியாது! One should not preach what he cannot follow! தமிழ்த்திரையுலகை முற்றும் திருத்திய பின்னர் அம்மாமனிதர் தமிழ்நாட்டுத் தமிழர்கள் பக்கம் தன் கவனத்தை திருப்புதல் தான் அவர் செய்யக்கூடிய சாலச் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்!!! தாங்கள் பெர்லின்வாசி என்பதால், கமலின் பேச்சு தங்களை பாதிக்கவில்லை போலும்!?!?
மூர்த்தி அவர்கள் கூறியது போல், "அவரை வாழவைத்தது தமிழகத் தமிழர்கள் என்பதை அவர் மறந்தது கொடூரம்!" 'தமிழை வளர்க்கும் எங்கள்(?) சிங்கம்' இதை கட்டாயம் உணர வேண்டும்.
என்றென்றும் அன்புடன்
பாலா
"அவர் சின்ன டிவியில் பேசியிருக்கலாம்" என்பது நான் கூற வந்த கருத்தே அல்ல! நான் கூறியிருந்தது, "அவர் சார்ந்த திரைப்படத் துறையாலும், அவர் அடிக்கடி தோன்றும் சின்னத்திரையாலும் தமிழுக்கு ஏற்படும் சீரழிவையும், பின்னடைவையும் பற்றி (மட்டும்) பேசியிருந்தால் அது நியாயமும் நேர்மையும் கூடிய பேச்சாக அமைந்திருக்கும்" என்பதே!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
Dear Tamil_udanpirappukal!
Sorry, I dont have tamil typewriter in my hand. So replying in english.
Let me ask you one simple question? Consider that kamal gives you a movie, based on a tamil subject, in senthamizh accent. Those who has replied to this post, or who has written this blog, will enjoy it. if you are ready, kamal will be happy to present it. he is that kind of man.
Though your rational feeling is appreciable, there is no strong base in your arguments. Since he has blamed you, you are blaming him in return. There is no difference between opposition parties and you.
while many of us dont know to speak in 'kochchai' tamil, we should appreciate one who spoke it correctly. Instead, why you are shouting as if he has pulled your trousers.
Ofcourse, I accept, he shouldnt have blamed tamilnadu alone. he should have included all tamils. if you want examples for our beauty of applied language, there are nasty examples.
Please try to think read/think with a clear mind. see the world with transparent glass.
-pandian
Post a Comment